கர்நாடகாவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கிறது

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இந்தி இடம்பெற்ற போது அதற்கு எதிராக எவ்விதப் போராட்டமும் நடக்கவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. அதுபற்றி, தமிழ்மொழிக்காப்புப் போராட்டங்களை முன்னெடுக்கும் ஆழி.செந்தில்நாதன் எழுதியிருப்பது….

தேசியம் என்றாலே இந்தி மட்டும்தானா? –
கர்நாடகத்தில் வலுக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம்.

கர்நாடகத்தில் பெங்களூர்-மைசூர் நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை இப்போது தேசிய நெடுஞ்சாலையாக ஆகிவிட்டதால் அதன் வழியில் இருக்கும் பெரும்பாலான மைல்களில் கன்னடம் நீக்கப்பட்டுவிட்டு இந்தி சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இது முன்பு நடந்திருக்கிறது. நாம் சும்மா இருந்தோம்.

இப்போது கன்னட நண்பர்கள் இந்த அடாத செயலுக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார்கள். அவர்களோடு கரம் கோர்த்து நாமும் நிற்கிறோம். மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (CLEAR) மற்றும் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தி்ன் சார்பாக அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

Leave a Response