திருமாவளவன் அழைப்பு – விஜயகாந்த் சீமான் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் பேராதரவு நல்கியிருந்தன.

இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 02 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனிதச்சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

இவண்,
1)திரு.ஆசிரியர் கி. வீரமணி
தலைவர் – திக
2)திரு. கே.எஸ். அழகிரி
தலைவர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
3)திரு. வைகோ
பொதுச் செயலாளர் – மதிமுக
4)தோழர் கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் – சிபிஐ (எம்)
5)தோழர் இரா. முத்தரசன்
மாநில செயலாளர் – சிபிஐ
6)திரு.தொல். திருமாவளவன் எம்.பி.
தலைவர் – விசிக
7)திரு. கே.எம். காதர்மொய்தீன்
தலைவர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
8)திரு.எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர் – மனிதநேய மக்கள் கட்சி
9)திரு. தி.வேல்முருகன்
தலைவர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ஆதரவாகக் களம் காணும் கட்சிகள்,,,

1.தேமுதிக
2. இந்திய தேசிய லீக்
3. எஸ்.டி.பி.ஐ.
4. நாம் தமிழர் கட்சி
5. சிபிஐ (எம்.எல்- விடுதலை)
6. தமிழ்ப் புலிகள் கட்சி
7. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
8. அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்
9. தமிழக விடியல் கட்சி
10. பீமாராவ் குடியரசு கட்சி

ஆதரிக்கும் சனநாயக இயக்கங்கள்…..

1.திராவிடர் விடுதலை கழகம்
2.த.பெ.தி.க
3.மே17 இயக்கம்
4.சிஐடியு
5.ஏஐடியுசி
6.எல்.எல்.எப்.
7.மக்கள் மன்றம்
8.புலிப்படை
9.தமிழ்நாடு இளைஞர் சங்கம்
10.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
11.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
12.மக்கள் அதிகாரம்
13.டிசம்பர் 3 இயக்கம்
14.காஞ்சி மக்கள் மன்றம்
15.இந்திய மாணவர் சங்கம்
16.அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
17.தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு
18.தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச் சங்கம்
19.தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு
20.இந்திய ஜவுஹித் ஜமாத்
21.மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்
22.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவுடன் தேர்தல் கூட்டணி மற்றும் தோழமையுடன் செயல்பட்டுவருபவை.

இவற்றுடன் விஜயகாந்த்தின் தேமுதிகவும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response