வைர நகைகளுக்கு 1.5 மருத்துவத்துக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி – மோடியை வெளுத்த இராகுல்

சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’,2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது.இவ்வாண்டு ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த ஆட்சியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஜிஎஸ்டி குறித்து ஒன்றிய அரசைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…..

மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி: 18%
மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி: 5%
வைரங்கள் மீதான ஜிஎஸ்டி: 1.5%

இதன் மூலம் பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்? ஏழை, நடுத்தர மக்களுக்குப் பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவும், உள்ள தற்போதைய ஜிஎஸ்டி வரி முறையைக் கைவிட வேண்டும். குறைவான அளவில் ஒற்றை ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வருவதன் மூலமே ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response