மோடி அரசின் அட்டூழியம் – இன்றும் கடுமையாக உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

உபி உள்ளிட்ட ஐந்துமாநிலத் தேர்தல் காரணமாக விலை உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த மார்ச் 22 ஆம் தேதி லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.54, டீசல் விலை ரூ.4.57 அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து ரூ.96க்கு விற்பனையாகிறது.

அதேபோல, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94க்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரே வாரத்தில் 7வது முறையாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசின் இந்த அட்டூழியத்தால் மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Leave a Response