ராஜபக்ச யாழ்ப்பாண வருகைக்குக் கடும் எதிர்ப்பு – கந்தரோடை பயணம் இரத்து

தமிழீழப் பகுதியான யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் சிங்கள பிரதமர் மகிந்த ராஜபக்ச.

அவர் நேற்று மத வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபடத் தீர்மானித்திருந்தார்.

கந்தரோடை விகாரையில் ராஜபக்ச அடிக்கல் நாட்டுவதாகச் செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது பயணத்தை இரத்து செய்துள்ளார்.

அதேபோல் இன்று நல்லூர் கந்தசாமி கோயில் வழிபாட்டுக்காக ராஜபக்ச வரவிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச எங்களுடைய நிலத்திலே வந்து தமிழினத்துக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டுக்கு வருவதாக ஏற்பாடாகி இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்ககூடிய மகிந்த ராஜபக்ச எங்களுடைய மண்ணுக்கு வருவதை முற்றுமாக எதிர்க்கின்றோம் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

Leave a Response