ஐபிஎல் 15 – ஏலம் தொடங்கியது தமிழக வீரர் 5 கோடிக்கு எடுக்கப்பட்டார்

ஐபிஎல் டி20 தொடரின் 15 ஆவது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுக்க வசதியாக ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடத்தப்படுகிறது.

ஏற்கெனவே 8 அணிகள் உள்ள நிலையில், புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகளும் அணித்தலைவர் உட்பட தலா 3 வீரர்களைத் தேர்வு செய்துள்ளன. எஞ்சிய வீரர்களை மெகா ஏலத்தில் தேர்வு செய்ய உள்ளன. ஏலத்தில் இடம் பெற மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 590 பேர் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். அடிப்படை விலையாக ரூ2 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் அஷ்வின், போல்ட் உள்பட 48 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ. 8 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

இந்திய அணி வீரர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

தென்னாப்பிரிக்க அணி வீரர் ஃபாஃப் டூ ப்ளசிஸை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தென்னாப்பிரிக்க அணி வீரர் குவிண்டன் டி காக் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Leave a Response