திருகோணமலை மீனவர்கள் மாயம் – தமிழக முதல்வர் உதவ பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருக்கடலூர் என்னும் ஊரைச் சேர்ந்த சரண்ராஜ், நதுஷன், சஞ்சீவன் ஆகிய மூன்று தமிழ் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடந்த மே மாதம் 23 அன்று கடலில் சென்றுள்ளனர். ஆனால் இது வரை அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவில்லை.

சிங்களக் கடற்படையினர் அந்தப் படகு இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் தமிழகக் கடற்கரையில் எப்பகுதியிலும் அந்தப் படகு வந்து ஒதுங்கியதாகத் தெரியவில்லை. இந்தியக் கடலோரக் காவல் படை, இந்தியக் கடற்படை ஆகியோரும் இந்நிகழ்ச்சி குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.

எனவே தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அந்த மூவரையும் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response