தமிழக அளவில் மாணவர்களுக்கான திருக்குறள் போட்டி.மதுரையில் நடக்கிறது

தமிழக அளவில் மதுரையில் நடைபெறும் திருக்குறள் போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களால் “திருவள்ளுவர் மாணவர், இளைஞர்’ எனும் அமைப்பை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் சார்பில் தமிழக அளவிலான திருக்குறள் போட்டி, மதுரை கோபாலகிருஷ்ணன் நகரில் உள்ள மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளியில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி காலை 8 முதல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
திருக்குறளைப் பிரபலப்படுத்தவும், திருக்குறளைக் கற்று அதில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், திருக்குறளின் மேன்மையை நாடு முழுவதும் பரப்பும் நோக்கிலும் திருக்குறள் ஒப்புவித்தல், திறனறிதல் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பிடம் பெறும் மாணவர்களும், அவர்களது ஆசிரியர்களும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்தில் அழைக்கப்பட்டு கெüரவிக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்களை மத்திய அமைச்சர் வழங்க உள்ளார். மேலும், அவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள இப்போட்டியில் 12 முதல் 29 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் தங்களின் பள்ளி / கல்லூரியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மாணவர் பெயர், வகுப்பு, வயது, தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களை அக்டோபர் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி குறித்த விவரங்களை 8098538635, 9944458123 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Leave a Response