மெரினா கடற்கரை திறப்பு – வியாபாரிகள் வேதனை

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது அழகான நீளமான கடற்கரையாகத் திகழ்கிறது. சென்னை மக்களும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் தங்கள் பொழுதுபோக்குக்காக அதிக அளவில் கூடும் இடமாக மெரினா கடற்கரை திகழ்கிறது.

மக்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியை அளிக்கும் இடமாக கடற்கரை விளங்குகிறது. கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த மெரினா கடற்கரைக்கு கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரம், அங்கு செயல்படும் நூற்றுக்கணக்கான கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இத்னால் அக்கடை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 9 மாதங்கள் எங்கள் வாழ்வு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இப்போது கடற்கரையைத் திறந்திருக்கும் அரசாங்கம் கடைகளையும் திறக்க அனுமதிக்கவேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோருகின்றனர்.

Leave a Response