தமிழகத்தில் செப்டெம்பர் 7 முதல் முழுமையான பேருந்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து – அரசு அறிவிப்பு

தமிழகம் முழுக்க செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டத்துக்குள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

அவை இயங்கத் தொடங்கிய இறண்டாம் நாளான இன்று, 7.09.2020 முதம் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் முழுமையான பொதுப் போக்குவரத்து தொடங்குகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Leave a Response