தமிழக அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் அவதி- ஜெ கவனிப்பாரா?

தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தேசியசாதனையாளர் ஆய்வு கூறுகிறது.

இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் ஆய்வுகூறியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 35.85 சதவீதம் மொழிப் பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அண்டை மாநிலங்களான கேரளா (11.23), தெலங்கானா (29.45), ஆந்திரா (23.32) மற்றும் கர்நாடகாவில் (2.87) சதவீதம் என ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றது. மேலும், இந்த நிலை நீடிக்குமேயானால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாக இருப்பதே முதற்கட்ட காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மக்களின் அடிப்படையான இந்தச் சிக்கலில் முதல்வர் ஜெயலலிதா கவனம் செலுத்தி, இதைச் சரி செய்வாரா? என்பது கல்வியாளர்களின் கேள்வி.

Leave a Response