ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – மக்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை,தொடர்வண்டிப் போக்குவரத்து உள்ளிட்ட பொது[ போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு வண்டிகள் இயக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு வண்டிகள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது சில மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

அதேநேரம் சிறப்பு வண்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக ஆகஸ்ட் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Leave a Response