இலங்கை நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரும் கட்சியானது கூட்டமைப்பு

இலங்கையின் 8-வது நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 225 உறுப்பினர்கள் கொண்ட அவைக்கு 106 இடங்களில் வெற்றியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
மொத்தம் 225 தொகுதிகளில் மாவட்ட அளவு இடங்கள் 196. இதற்குத்தான் வாக்குப்பதிவுகள் திங்களன்று நடைபெற்றது. வாக்குகள் பதிவான எண்ணிக்கைகளின் படி தேசியப் பட்டியலின் கீழ் இடங்கள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி 93 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார முறையில் மேலும் 13 இடங்களைப் பெற்று 106 இடங்களைப் பெற்றுள்ளது.

83 இடங்களில் வென்ற ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 83 இடங்களில் வெற்றி பெற்றதோடு, வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாசார முறைப்படி மேலும் 12 இடங்களை தேசிய பட்டியலின் கீழ் பெற்று மொத்தம் 95 இடங்களைப் பெற்றுள்ளது.
இலங்கையில்  நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்து, மாவட்டரீதியாக அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

மேலும், தேசியப் பட்டியலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி என்பதால், வரும் நாடாளுமன்றத்தில் குறைந்த்து 15 ஆசனங்களைக் கொண்ட கட்சியாக கூட்டமைப்பு திகழும்.

அதேவேளை, கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில், இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால், கூட்டமைப்பில் பலம் 16 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response