ரஜினிக்கு இந்தநிலை வரவேண்டாம் – திமுக எம்பி அதிரடி

கர்நாடகத்தைச் சேர்ந்த கேலிச்சித்திரக்காரர் சதீஷ் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் தர்மபுரி திமுக பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

அதோடு,சூப்பர் ஸ்டாரு ரஜினிக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

சிந்திப்பீர்-தமிழகம் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு / மரியாதையை காப்பது தான் முக்கியம்

அதை விட்டு தமிழர்களிடம் இருந்து வெகு தொலைவுக்கு உங்களை அழைத்து சென்று தமிழர் நலனுக்கு எதிரான அரசியல் செய்பவர்களிடம் சிக்க வேண்டாம்.

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பின்னூட்டமாக,

அதிமுக அமைச்சர்கள் மாதிரி, அவர் காவி வலையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்…!
விஜய் சேதுபதிக்கு தமிழர்கள் கிட்ட இருக்கும் மரியாதை கூட தற்போது ரஜினிக்கு இல்லை… இது அவருக்கும் தெரியும்..

ரஜினிக்கு சுயமாக சிந்திக்கும் திறன் கிடையாது அவர் ஒரு குழப்பவாதி
முடிவெடுக்கும் திறன் சுத்தமாக இல்லாததால் மற்றவர்கள் சொல்வதை எழுதி கொடுப்பதை
அதாவது உள்ளே விழுங்குவதை கேட்டுக்கு வெளியே வந்து கக்கி வைத்து விட்டு ஓடிபோரவருக்கு நல்லது கெட்டது தெரிய வாய்ப்பில்லை

இவ்வாறு பலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.அதில் ரஜினிக்கு ஆதரவாகச் சிலரும் கருத்துச் சொல்லிவருகின்றனர்.

Leave a Response