ராஜபக்சேவுக்கு இப்படி ஒரு வரவேற்பா? – வலியுடன் வெடிக்கும் விமர்சனங்கள்

சிங்கள பிரதமர் ராஜபக்சே இந்தியா வரும்போதெல்லாம் திருப்பதி மலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைக்கு இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜபக்சே ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி சென்றார்.

ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோதும் பலமுறை திருப்பதி மலைக்கு வந்து இருக்கிறார். அப்போது ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலையில் அவர் தங்கும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் மட்டுமே வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கும் வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பான முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை அடிவாரம் வரை ராஜபக்சேவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வெல்கம் டு இந்தியா என்று ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இதுவரை இல்லாத வகையில், குச்சிப்புடி நடனத்துடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து உலகத்தின் முன்னால் இனப்படுகொலைக் குற்றவாளியாக நிற்கும் ராஜபக்சேவுக்கு இதுவரை இல்லாத அளவில் வரவேற்பு அளித்து தமிழகத் தமிழர்களின் உணர்சிகளைக் கொலை செய்துவிட்டார் மோடி என்றும்,

எல்லா விசயங்களிலும் பாஜகவை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் தமிழக மக்களைக் குரூரமான முறையில் பழிவாங்கவே மோடி இப்படிச் செய்கிறார் என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response