620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகிறது

இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இன்று 620 கி.மீ தூரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இன்று நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கன்னம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிக்கப்பட்டபின் மாலை 4 மணிக்கு மனிதச்சங்கிலி தொடங்கியது. தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளையும், களியக்காவிளையில் முடியும் இடத்தில் எம்.ஏ.பேபியும் நின்றனர்.

ஏராளமான பொதுமக்களும், முக்கிய நபர்களும், மாணவர்களும், மாணவிகளும் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.பல புதுமணத் தம்பதியர்களும் திருமணம் முடிந்த கையோடு சாலைக்கு வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 70 இலட்சம் மக்கள் வரை இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தின் 71 ஆவது குடியரசு நாளில் கேரள மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response