மரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை

தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

கடந்த மாதம் 27ம் தேதி ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்டது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாகும் இந்த கொடுஞ்செயலை செய்த கொடியவர்களை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த தெலுங்கானா காவல்துறையை பாராட்டுகிறேன்.

மரண தண்டனை என்கவுண்டரில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை ஆனால் இந்த என்கவுண்டர் நிகழ்வுமட்டும் விதி விலக்காக பார்க்கிறேன். குற்றவாளிகள் என உறுதி செய்து உடனடியாக சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்
பாரதிராஜா

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response