ஜெ கைரேகை சர்ச்சையில் சிக்கிய பேராசியர் பாலாஜிக்கு புதிய பதவி

தமிழகம் முழுவதும் 13 பேராசிரியர்களுக்கு மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு வழங்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பேராசிரியர் முத்துக்குமரன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை குந்தவை தேவி விழுப்புரம் மருத்துவக்கல்லூரி முதல்வராகவும்,

சென்னை மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் அல்லி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

நெல்லை மருத்துவக்கல்லூரி பொது மருத்துவ பேராசிரியர் ரவிச்சந்திரன் நெல்லை மருத்துவக்கல்லூரி முதல்வராகவும்,

காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்த முத்துகிருஷ்ணன் புதிதாக விருதுநகரில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், தேனி மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் முருகேசன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும்,

மதுரை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர் சங்குமணி மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும்,

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

நெல்லை மருத்துவக் கல்லூரி சிறுநீரக துறை பேராசிரியர் திருவாசகமணி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி நுண்துளை அறுவை சிகிச்சை பேராசிரியர் பாலாஜி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

கோவை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத்துறை பேராசிரியர் ரவீந்திரன் நீலகிரியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக்கல்லூரி முதல்வராகவும்,

மதுரை மருத்துவக்கல்லூரி இதய அறுவை சிகிச்சை பேராசிரியர் ரத்தினவேல் சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும்,

கோவை மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் நிர்மலா திருப்பூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பேராசிரியர் பாலாஜி, ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு 2016 நவம்பர் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் அளித்தார்.

அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவிட்டிருந்தார். ஜெயலலிதா கைரேகை போட்டபோது கூட இருந்ததாக சான்றிதழ் கொடுத்தவர்தான் டாக்டர் பாலாஜி.

ஜெயலலிதா தான் ரேகையைப் பதிவுசெய்தார் என்பதற்கு சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் பி. பாலாஜி சான்றிதழ் அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பாபு கே ஆபிரகாம் சாட்சிக் கையெழுத்தை இட்டார்.

“இங்கே ஒப்புதல் அளித்திருப்பவர், சமீபத்தில்தான் ”ட்ராகியோஸ்டமி’ சிகிச்சைக்கு உள்ளாயிருப்பதால் அவரது வலது கை வீங்கியுள்ளது. அவரால் கையெழுத்திட முடியாது. ஆகவே, அவர் தனது இடது கைப் பெருவிரல் ரேகையை எனது முன்னிலையில் தானாகவே பதித்தார்” என பேராசிரியர் பாலாஜி அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா, கைரேகை போலியானது என்று உறுதியானதாக நீதிமன்றமே அறிவித்து விட்டது. இதனால், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும், சிபிஐ அலுவலகத்திலும் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் டாக்டர் பாலாஜிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response