ஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே, ராஞ்சியில் இன்று 3 ஆவது இறுதி ஐந்துநாள் மட்டைப்பந்து போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். 3 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அணித்தலைவர் விராட் கோலியும் 12 ரன்களில் வெளியேறினார்.

இதனால், இந்திய அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. துவக்க வீரர் ரோகித் சர்மாவும், ரஹானாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர்.

ரோகித் சர்மா சதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். மேலும், ரஹானா அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணி தற்போது 3 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளது.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித் சர்மா 164 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 117 ரன்களுடனும் அஜிங்கிய ரஹானே தகுதியுடைய ஒரு அபார சதத்தை நோக்கி 83 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

Leave a Response