நொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது மழை பெய்தது. சில இடங்களில் காலையில் இருந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர் வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் இருகரை களையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த ஆறு மூலம் நீராதாரம் பெற்று வரும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.

இவ்வாறு செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கோவையச் சேர்ந்த ஒரு அமைப்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர வைக்கின்றன.

noyyal
noyyal

இது பனி மழை அல்ல. இன்று அதிகாலையிலிருந்து கோவையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் மழையால் நொய்யல் ஆற்றில் இருந்த சாயக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் நுரைத்து மேலே வந்து சாலையில் பறக்கின்றன. கற்பனையே செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் இயற்கையின் கோர தண்டவம் நிகழ்த்திக் காட்டுகிறது.

இயற்கையின் கோபத்தில் வெளிப்படும் மனிதனின் அயோக்கியத்தனம். எந்த அளவுக்கு ஆறுகளையும், ஓடைகளையும் கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டும் படம் இது. உலகப் புகழ் பெற வேண்டிய படம்.

தொழில் மயத்துக்குக் கொடுத்த விலை.

இடம் கோவை ஒண்டிபுதூர் சாலை.

இவ்வாறு சொல்லி பலரும் இப்புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Response