புலிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு – மோடி பெருமிதம்

அழிந்து வரும் புலிகள் இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம்
கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
அந்தக் கணக்கெடுப்பின் படி 2018 இல் இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன.

2014 ஆம் ஆண்டில் 2,226 புலிகள் இருந்த நிலையில், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்ட பின் பேசிய பிரதமர் மோடி,புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது ஒவ்வொரு இந்தியனையும், இயற்கையை நேசிப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகில் புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, புலிகளின் எண்ணிக்கையை 2022 ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக்க வேண்டும் என்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் அந்த இலக்கை நாம் 4 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளோம் என்றார்.

Leave a Response