இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து கவுதம்கம்பீர் கருத்துக்கு எதிர்ப்பு

மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இவர் இந்திய மட்டைப் பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய கவுதம் கம்பீர்,

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ஐசிசி உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாடக் கூடாது, ஏன் இறுதிப் போட்டியில் விளையாடும் நிலைமை ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. இதனால் இந்தியாவிற்கு சில புள்ளிகள் இழப்பு ஏற்பட்டால் கூட விளையாடக்கூடாது. நம் வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை நினைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response