தாஹிரின் பந்து வீச்சில் சிதறிய கொல்கத்தா – சென்னை அதிரடி வெற்றி

ஐபிஎல் 12 – கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 29 ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 14) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்துள்ளது.

கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 82 (51) ரன்கள் விளாசினார்.ஆந்த்ரே ரஸல் பத்து ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணியில் சிறப்பாகப் பந்து வீசிய இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தாகூர் 2 விக்கெட் மற்றும் சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும் இப்போட்டியில் சென்னை அணி வீரர் டு பிளசிஸ் 4 கேட்சுகள் பிடித்தார்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (162 ரன்கள்) இலக்கை எட்டியது.

இதன்மூலம் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 58 (42) ரன்களும், ரவீந்திர ஜடேஜா 31 (17) ரன்களும் விளாசினர்.

கொல்கத்தா அணியில் பியுஷ் சாவ்லா மற்றும் சுனில் நரின் 2 விக்கெட்டுகளும், ஹாரி கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Response