முதன்முறை களமிறங்கும் சந்திரபாபு நாயுடு மகன் வெற்றி உறுதி

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும் தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் (வயது 36) குண்டூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்கலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அல்ல ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.

நெசவாளர்களை அதிகமாகக் கொண்ட இந்தத் தொகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்குதேசம் கட்சி ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அரசியலில் புதிய பாதையை வகுப்பதற்கே இந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக நர லோகேஷ் கூறியுள்ளார்.

இதற்கு, மாநில அரசின் வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தனியார் துறையில் 3 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய 3 அம்சங்கள் கைகொடுக்கும் என தெரிவித்தார்.

இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அல்ல ராமகிருஷ்ணரெட்டி, கடந்த தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளரை வெறும் 12 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்.

இந்தமுறை தெலுங்குதேசம் சார்பில் சந்திரபாபுநாயுடுவின் மகனே களமிறங்குவதால் அவர் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்கிறார்கள்.

Leave a Response