ரஜினியை வம்புக்கிழுத்த நடிகை கஸ்தூரி

ரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.அண்மையில் தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வேத் கிருஷ்ணா தாத்தாவிடம் ஆட்டோவில் போக வேண்டும் என்கிற தன் ஆசையை கூறியிருக்கிறான்.

உடனே ரஜினி தன் கார் டிரைவர் மூலம் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் அவரும், பேரனும், மகள் சவுந்தர்யாவும் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றனர். பேரன் வேத் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதை ரசித்தபடி ரஜினி சென்றுள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக காரில் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

ஆட்டோவில் ரஜினி குடும்பத்துடன் பயணிப்பதை பொது மக்கள் சிலர் கண்டுபிடித்து அவரை பார்த்து கை அசைத்தனர். ரஜினியும் பதிலுக்கு கை அசைத்தார்.ஆழ்வார் பேட்டை தனுஷ் வீட்டில் சுமார் 2 மணி நேரம் செலவிட்ட ரஜினி, அதன் பிறகு தனது காரில் போயஸ்கார்டன் வீட்டுக்குத் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி ஆட்டோவில் பயணம் செய்ததோடு ரஜினியை ஒப்பிட்டு, நாங்களும் .. என்று ட்வீட் செய்திருந்தார்.

இதனால் பல ரஜினி ரசிகர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர்.

Leave a Response