
கமலஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
நான் மருத்துவமனைக்குச் சென்றபோது தி.மு.க. தலைவர் கலைஞரை சந்திக்க முடியவில்லை. என்னுடைய ஆதங்கத்தின் காரணமாக போனேன்.
கலைஞர் நலம் பெற்றுவிட்டதாகவும், இல்லை என்றும் கூறுவது பற்றி எனக்கு தெரியாது. சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. கலைஞர் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோரையும் போல் என்னுடைய ஆசையும் ஆகும்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் கலைஞரைச்சந்திக்கவில்லை.
கலைஞர் உடல்நலம் குறித்து நல்ல செய்தியாக இருக்கும் என்பதால் வெளியூர் செல்கிறேன்.
கலைஞரை, முதல் அமைச்சர் உள்பட அ.தி.மு.க.வினர் சென்று உடல்நலம் விசாரித்தது நல்ல மாண்பு.
19 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் பெரும் தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது முக்கியமல்ல. இது போன்ற நிகழ்வுகளில் மாண்பு காண்பிப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.


