தமிழ்ப்பகுதிகளிலும் தமிழிளைஞர்களுக்கு அரசு வேலை தர மறுக்கிறது சிங்கள அரசு.

இலங்கைத் தீவில் வேலை வழங்கலில் இன்னமும் தமிழர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை.

வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனபேதத்தால் தமிழர் பிரதேசங்களில் கல்வியை முடித்தவர்களுக்கு வேலை வழங்க தென்னிலங்கை நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் பின் வாங்குகின்றனவாம்.   இதனால் வடகிழக்கு தமிழ் இளையவர்கள் பலர் கல்வியை முடித்துவிட்டு வேலை இல்லாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

பட்டம் பெற்ற இளையவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய இலங்கை அரசு அதனது இன வாதப் போக்கால் வடகிழக்கு தமிழ் இளைஞர்களிடம்  பாராமுகமாக இருந்து வருகிறது.

இத்தகைய பாராபட்சம் இளையவர்களை வேதனைக்கு  உள்ளாக்கியிருக்கிறது.

இதனால் அடையாளப்பூர்வமாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அரசு வேலையை வழங்க வேண்டும் என்றும் தமக்கு குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை எழுத்துருவில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றும் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்தும் அதே நேரம் இவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முனைப்போடு போராட வேண்டும் என வலியுறுத்துவோமாக.

தமிழர்கள் தன்னாட்சியோடும் தன்னிறைவோடும் வாழ ஒரே வழி தமிழீழமே!

Leave a Response