கடைமடை வரை கரைபுரளும் காவிரி – கண்டுகளிக்கும் மக்கள்

ஜூலை 24 இரவு நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.37 அடியாக இருந்தது. அணைக்கு சுமார் 75,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து அதேஅளவில் திறக் கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரியில் 7,013 கனஅடி யும், வெண்ணாற்றில் 7,022 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,822 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், நேற்று இரவு நிலவரப்படி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 51 ஆயிரம் கனஅடி யும், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு 24 ஆயிரம் கன அடியும் வந்தது.

இந்த தண்ணீரில் ஏறத்தாழ 30 ஆயிரம் கனஅடி இன்று (ஜூலை 25) காலை கல்லணைக்கு வந்தடைந்தது.

காவிரியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கபிஸ்தலம் வரை தண்ணீர் சென்றுள்ளது. இந்த தண்ணீர் இன்று காலை கும்பகோணத்தையும், மாலையில் மயிலாடுதுறையையும், இரவு கடைமடைப் பகுதியையும் சென்றடையும்.

திருவாரூர் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பகுதிக்கு பாசனம் அளிக்கும் வெண்ணாறு வடிநிலக்கோட்டத் தில் உள்ள நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பிரியும் வெண் ணாறு, கோரையாறு, பாமணி ஆகிய 3 ஆறுகளிலும் நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த ஆறுகளில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 2.54 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறு கின்றன.

இதில் வெண்ணாற்றில் 1,546 கனஅடியும், கோரையாற்றில் 1,716 கனஅடியும், பாமணி ஆற்றில் 606 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து ஜூலை 22-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாற் றில் கொரடாச்சேரி வரையிலும், கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூர் மாநகரப் பகுதி வரையிலும் சென்றடைந்துள்ளது.

கிட்டத்தட்ட கடைமடைப் பகுதி வரை காவிரி நீர் வந்து சேர்ந்திருப்பதால் காவிரிக்கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், காவிரி வெள்ளத்தைக் காட்டிலும் அதிகமான மக்கள் வெள்ளம் காவிரி கரைபுரண்டோடும் அழகை ரசித்துக்கொண்டிருக்கிறது.

Leave a Response