மதிமுகவினர் அடித்தது ரஜினி மன்றத்தினரையா? – அடுத்த சர்ச்சை ஆரம்பம்

பிரணாப் முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடிகாட்டிய வழக்கில் ஆஜராக நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்திருந்த வைகோவை, அவதூறாகப் பேசிய சில வழக்கறிஞர்களை மதிமுகவினர் தாக்கினர். அவதூறு பேசியவர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என மதுரை விமான நிலையத்தில் வைகோ கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாழ்தமிழர் கட்சி வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த. சந்திரசேகர்,

அந்த வழக்கறிஞர்கள் எங்களது கட்சியைச் சார்ந்தவர்களே அல்ல. அவர்களுக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக நாம்தமிழர் கட்சி மீது வைகோ பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். இது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது என்றார்.

இதிலிருந்து ரஜினி மன்றத்தைச் சேர்நதவர்களை மதிமுகவினர் தாக்கிவிட்டதாக அடுத்த சர்ச்சை தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது.

Leave a Response