பாமகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

26.6.2018 அன்று சென்னை காவல்துறை ஆணையரிடத்திலும், தமிழ்நாடு பொதுச்சுகாதாரத்துறையிலும் – மருத்துவர் இராமதாசை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து – புகைபொருட்களையும் புகைபழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர் வடிவமைக்க பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசின் பொது சுகாதாரதுறை படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,வெறும் எச்சரிக்கையுடன் மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காக பசுமைத் தாயகம் அமைப்பு பாடுபடும் என்றும் கூரியிருந்தார்கள்.

இதனால் பாமகவுக்கு எதிராகவும் மருத்துவர் இராமதாசு
மற்றும் அன்புமணிக்கெதிராகவும் விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

ட்விட்டரில் குடிசை கொளுத்தி பாமக என்கிற ஹேஷ்டேக்கில், கடுமையாகப் பேசி வருகின்றனர்.

ஒரு ஊருயே கொளுத்துவ இதில் நீ நியாயம் பேசிறியா?
உன் கிட்ட பதவி பணம் னு சகலமும் இருக்கலாம்.
என் கிட்ட உண்மை இருக்கு,
எனக்கு ஒன்னுனா உயிரு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கு

விஜயை எதிர்த்ததால ஜெயலலிதாவுக்கு வந்த நிலைமையை யோசிச்சு பாத்துட்டு விஜய்கிட்ட மோதுங்க அன்புமணி
#குடிசைகொளுத்திபாமக

இது தெரியாதா உங்களுக்கு? குடிசையை கொளுத்தும் கட்ச்சிக்கு தலைவர்,எங்கள் கட்ச்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று சொல்லிவிட்டு முக்கிய பதவிகளை அப்பனும்,மகனும் ஷேர் பண்ணிக்கிற எச்சைகள்,சாதி கலவரல் தூண்டுபவன்,மறுத்துவ துறையில் ஊழல் புகாரில் சிக்கிய கயவன் #குடிசைகொளுத்திபாமக

இவை போன்று ஏராளமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response