+2 வில் அதிக மதிப்பெண், நீட் தேர்வில் தோல்வி -மனமுடைந்த மாணவி தற்கொலை

இந்தியா முழுக்க மே 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை சுமார் 13 லட்சம் பேர் எழுதினா்.தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா ப்ளஸ்2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவி பிரதீபாவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதியற்ற நீட் தேர்வால் இன்னும் எவ்வளவு தகுதியான மாணவிகளை இழக்கப் போகிறோமோ?

Leave a Response