கமலின் அதிகப் பிரசங்கித்தனம் – வழக்குரைஞர் கண்டனம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது.

இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார்.

இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது கமல் கூறியதாவது,
“நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால், தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்.

கமலின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வந்துள்ளது. காவிரிச் சிக்கலில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்கிற நிலையில்தான் நீதிமன்றத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

இப்போது உச்சநீதிமன்றத்தை மீறி கமலும் குமாரசாமியும் முடிவெடுத்துவிடுவார்களா? என்கிற கேள்விகள் வருகின்றன.

காவிரிச்சிக்கலில் எல்லா விசயங்களும் தெரிந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,

கமல்ஹாசன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமா நடக்கறாரே …..

அரசியல் களத்தில் நீண்டகாலம் இருக்கும் சீனியர்களைவிட திடீரென்று வந்த கமலஹாசனுக்கு இதுவரை இல்லாத முந்திரிக்கொட்டைத்தனமாக தன்னுடைய சுயஇருப்பைக் காட்டும் போக்குகள் யாவும் அவரை ஆளுமையாக்கிவிடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாரும் இல்லாத இடத்தில் ரட்சகர் போல செயல்படுவது வேடிக்கையாகவும், சில சமயம் பரிகாசமாக உள்ளது. இதுவரை கர்நாடக முதல்வரை யாரும் சந்திக்காத மாதிரியும், இவர்தான் முதலில் காவிரி தண்ணீரை பெறுவதை போன்ற முதிர்ச்சியில்லாததனங்கள் ; பொதுத்தளத்தில் அவரை லாயக்கற்றவர் ஆக்கி விடும் என்று கூறியிருக்கிறார்.

Leave a Response