ஐபிஎல் – சென்னை அபார வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் போட்டி புனேயில் நடைபெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் எம்.எஸ் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச் 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி. அடுத்ததாக களமிறங்கிய மனோஜ் திவாரி 35(30)ரன்களும், டேவிட் மில்லர் 24(22)ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அதன்பின் களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம்சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் அம்பத்தி ராயுடு மற்றும் டூ பிளஸ்சி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ராயுடு 1(3) ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றினார். அவரை தொடர்ந்து டு பிளஸ்சி 14(15) ரன்னில் ராஜ்பூட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய பில்லிங்ஸ் 0(1) ரன் ஏதும் எடுக்காமல் ராஜ்பூட் பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுரெஷ் ரெய்னாவுடன் ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். ரன் சேர்க்க இந்த ஜோடி தடுமாறினர். இந்நிலையில் ஹர்பஜன் சிங் 19(22) ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் ரெய்னாவுடன் சாஹர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த சாஹர் 39(20) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா தனது அரை சதத்தை பதிவு செய்தார். கடைசியாக சுரேஷ் ரெய்னா 61(48) ரன்களும், டோனி 16(7) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராஜ்பூட், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மொகித் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியாக சென்னை அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Response