மோடியின் சர்வாதிகாரத்துக்குச் சவுக்கடி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், மஜகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்ற பிறகும்,

பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தால், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். அதற்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்பது திட்டம்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

அதனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் 3.30 மணியளவில் கூடிய சட்டப்பேரவையில் பதவியேற்காமல் இருந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர்.

அதன்பின், முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என எடியூரப்பா கூறினார்.

அவர் பதவியேற்ற 56 மணிநேரத்தில் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடகத்தில் பாஜக செய்த சனநாயகப் படுகொலையை அனைவரும் போராடி முறியடித்துள்ளனர் என்றும் மோடியின் சர்வாதிகாரத்துக்கு சவுக்கடி கிடைத்துள்ளதாகவும் பலர் கருத்து சொல்கின்றனர்.

Leave a Response