ஐபிஎல் – டெல்லியை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்

மே 10 அன்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிசப் பண்ட் சதம்(128) விளாசினார்.

188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே வலுவாக இருந்த ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 191 ஓட்டங்கள் எடுத்து
அபார வெற்றி பெற்றுள்ளது.

தவான் மற்றும் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக தவான் 92 ரன்கள், வில்லியம்சன் 80 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

Leave a Response