சென்னை மதுரையில் கடும் வெயில் சேலத்தில் மழை – கபடி ஆடும் வானிலை

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது….

திருத்தணி மற்றும் வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வடக்கு திசை காற்று, தெற்கு திசை காற்று தமிழகத்தின் வழியே பயணிப்பதால் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் 40-42 டிகிரி வெப்ப நிலை பதிவாக கூடும். சென்னை மற்றும் புறநகரில் 38 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனக் கூறினார்.

சில மாவட்ட்ங்களில் வெயில் கொளுத்தும் வேளையில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது ஆறுதலாக இருக்கிறது.

Leave a Response