
11 வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் 25 வது லீக் போட்டியில், ஏப்ரல் 26 அன்று,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,சன்ரைசர்ஸ் ஐதராபாத்தைச் சந்தித்தது.
‘டாஸ்’ வென்ற பஞ்சாப், பீல்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், மில்லர் நீக்கப்பட்டு, மனோஜ் திவாரி, கெய்ல் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஐதராபாத் அணி தலைவர் வில்லியம்சன், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராஜ்புட், வேகப்பந்தில் மிரட்டினார். இவரிடம் சிக்கிய வில்லியம்சன், ஐ.பி.எல்., அரங்கில் முதன் முறையாக ‘டக்’ அவுட்டானார்.
தவான் (11), சகாவும் (6) இவரிடம் சிக்கினர். சாகிப் அல் ஹசன் (28) கைவிட்டார். 4, 9, 46 என, மூன்று முறை தப்பிப்பிழைத்த மணிஷ் பாண்டே, அரைசதம் அடித்து (53) திரும்பினார். ஐதராபாத் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. ராஜ்புட் 5 விக்கெட் சாய்த்தார்.
எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் (32), கெய்ல் (23) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அகர்வால் 12, கருண் நாயர் 13, பின்ச் 8, என, சொதப்பினர். திவாரி (1), டை (4), ஸ்ரண் (2) என, வரிசையாக திரும்பினர். அஷ்வினும் (4) அதிர்ச்சி தந்தார்.
கடைசியில் ராஜ்புட் (8) அவுட்டாக, பஞ்சாப் அணி 19.2 ஓவரில், 119 ஓட்டங்களுக்கு சுருண்டு, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது


