
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி- ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய பணித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் நிதிஷ் ராணா, டாம் குர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், சாவ்லா, குல்தீப், ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சுனில் நரின் 4 ஓவர்களில் 48 ரன்களை வழங்கினார். விக்கெட் கிடைக்கவில்லை.
பின்னர் 161 ஓட்டங்கள் தேவை என்ற நோக்கி கொல்கத்தா அணி ஆடியது.
இதைத் தொடர்ந்து சுனில் நரினும், ராபின் உத்தப்பாவும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தியதுடன், வெற்றிப்பாதைக்கும் வழிவகுத்தனர். சுனில் நரின் 35 ஓட்டங்களில் ரன்-அவுட் ஆனார். ராபின் உத்தப்பா 48 ஓட்டங்களில் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ராணா 35 ரன்களுடனும் (27 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
