வியாபம் ஊழல்வாதிகள் தமிழகத்தைக் குறை சொல்வதா?

47 சாட்சிகள் மர்ம மரணம், படுகொலை. 2100 பேர் கைது, கோடிக்கணக்கில் ஊழல், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்த ஊழல். கையும் களவுமாக சி.பி.அய் 1500 கிலோ தங்கம், 2000 கோடி ரூபாய் ஊழல் பணத்தைக் கைப்பற்றியது. இதையெல்லாம் செய்த யோக்கியர்கள் தான் இப்போது தமிழ்நாட்டுத் துணைவேந்தர்களைக் குற்றம்கூறியுள்ளார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், மருத்துவக்கல்வி, தொழிற்கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகப் போராசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பு வியாபம். (“Vyapam” Vyavsayik Pariksha Mandal). பா.ஜ.க ஆட்சியில் நடந்த இந்த வியாபம் ஊழல் தொடர்பாக, சாட்சியம் அளித்தவர்கள்
47 பேர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். 2009 இல் தொடங்கிய வழக்கு விசாரணையில் இதுவரை சுமார் 2100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில பா.ஜ.க முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான், ஆர்.எஸ்.எஸ். காரரான மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநிலக் காவல் துறைத் தலைவர், பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் சர்மா, ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் சுதர்சன் உட்பட ஏராளமான சர்மா, த்ரிவேதி, த்விவேதி, சதுர்வேதி, பாண்டேக்களாகிய பார்ப்பன யோக்கியர்கள் இந்த தொடர் ஊழலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.

அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் தலைவராக இருந்த கேதான் தேசாய் தனது நேர்மையான நடவடிக்கைகளால் 1500 கிலோ தங்கமும், 2000 கோடி ரூபாய் ரொக்கப்பணமும் சம்பாதித்துள்ளார்.சி.பி.அய் கைது செய்தபோது கைப்பற்றப்பட்ட தொகை மட்டுமே இவை. ஒன்னரை டன் தங்கத்தையும், 2000 கோடி ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்த நேர்மைக்குப் பிரதமர் மோடி கேதான் தேசாய் என்ற பார்ப்பனருக்கு ஒரு பரிசளித்துள்ளார்.
ஆம். உலக மருத்துவக் கல்விக் கழகத் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த யோக்கியர்கள் தான் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று கூறிக் கல்வியைப் பார்ப்பன மயமாக்கி வருகின்றனர். – Reference:
1.https://economictimes.indiatimes.com/topic/Vyapam-scam
2.https://www.indiatoday.in/buzztop/buzztop-national/story/vyapam-scam-cbi-chargesheets-86-including-former-madhya-pradesh-minister-1164857-2018-02-09
3.https://en.wikipedia.org/wiki/Vyapam_scam
4.http://www.vinavu.com/2015/09/23/vyapam-brahminical-criminial-scam-2/

– அதிஅசுரன்

Leave a Response