முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக அறிவிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12,2017 -ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் வாக்குப்பதிவுக்கு 2 நாட்கள் முன்னதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இ.மதுசூதனன் (அதிமுக), என்.மருது கணேஷ் (திமுக), டிடிவி தினகரன், கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாஜக) உட்பட 59 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24 இல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,
மொத்த வாக்குகள் – 2,28,234
பதிவான வாக்குகள் – 1,76,890
டிடிவி தினகரன் (சுயேச்சை) – 89,013,
இ.மதுசூதனன் (அதிமுக) – 48,306
என்.மருதுகணேஷ் (திமுக) – 24,651
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,860
நோட்டா – 2,373
பாஜக – 1,417
இம்முடிவுகளின்படி நாம் தமிழர் கட்சி உறுதியாக வளர்ந்து வருவது தெரிகிறது. 2016 பொதுத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் தேவி பெற்ற வாக்குகள் 2503 வாக்குகளாகும். வாக்கு சதவீதம் 1.44 ஆகும். இப்போதைய தேர்தலில் அது பெற்றுள்ள வாக்குகள் 3860. அதாவது 2.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
தினகரன், மதுசூதனன் ஆகியோரின் பணமழை திமுக தொண்டர் பலம் ஆகியனவற்றை எதிர்கொண்ட நிலையிலும் கூட நாம்தமிழர்கட்சி வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இதனால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.