சந்தானம் படத்துக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..!


சேதுராமன் இயக்கத்தில், சிம்பு இசையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். மேலும் படத்தில் விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் ரிலீஸாவதில் நீண்ட நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த படம் தற்போது வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநாளில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படமும், தினேஷ் நடிக்கும் ‘உள்குத்து’ திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response