இமான் அண்ணாச்சியின் ‘இணைந்த கைகள்’..!


நடிகர் இமான் அண்ணாச்சி, தற்போது சின்னத்திரையிலும், சினிமாவிலும் கலக்கி வருகிறார். தற்போது இவர் ‘இணைந்த கைகள்’ என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்புக்கு உதவுவது. அவர்களுடைய கல்விச்செலவை சமாளிக்கும் வகையில் அவர்களது குடும்பத்துக்கு சிறுதொழில் தொடங்க உதவுவது போன்றவற்றை செய்ய இருக்கிறார்கள்.

இதுகுறித்து இமான் அண்ணாச்சி கூறுகையில், ‘நான் சின்னத்திரை மற்றும் சினிமாவுக்கு வருவதற்கு முன், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தேன். அப்போது தள்ளுவண்டிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தேன். யாராவது ஒரு பழைய தள்ளுவண்டியை தரமாட்டார்களா என்று ஏங்கினேன். எனவே, இனிமேல் அப்படி யாரும் ஏங்கக்கூடாது என்பதற்காகவே ‘இணைந்த கைகள்’ என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளேன்” என கூறியுள்ளார்.

Leave a Response