உலகத்தலைவர்கள் வரிசையில் உயர்ந்த இடம் பெற்ற தலைவர் பிரபாகரன் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்


திரிக்கப்பட்ட தரவுகள்:
தேசத்தின் பகை நாடுகள், தேசத்தின் பாதுகாப்பு முதலானவை குறித்து இந்திய அரசுக்கு “வல்லுநர்கள்” வழங்கிய திரிக்கப்பட்ட தரவுகளும் அவற்றின் அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கைகள்-செயல்பாடுகளும்…

நேர்மையற்ற உறவுகள்:
திராவிடம், தமிழ், உயிர் மூச்சு, தொப்புள் உறவு, தனி நாடு… என்றெல்லாம் வார்த்தை ஜாலங்களில் தமிழர்களைத் திசைதிருப்பி, தன்னல அரசியல் மட்டுமே செய்து வரும் தமிழக தரகுக் கட்சிகளின் தலைவர்கள்…

முழுமையற்ற கணிப்புகள்:
ராஜபக்‌ஷ என்ற ஆளுமையின் அரசியல் திறன் குறித்த பிழையான மதிப்பீடும் தம் திறன்மீது இருந்த அதீத நம்பிக்கையும்; இவை அடிப்படையில் எடுக்கப்பட்ட களமாடும் முடிவுகள்…

—இன்னபிற காரணங்களால்
ஒரு கனவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதுபோன்ற நிலை…

எனினும்
இனவிடுதலைக்காகக் களம்கண்ட உலகத் தலைவர்கள் வரிசையில் இவருக்கென உயர்ந்ததோர் இடமுண்டு என்பதை யாரால் மறுக்க இயலும்?

பிரபாகரன்.
பிறந்தநாள்.

யுத்தம் சிதைத்துச் சின்னபின்னப் படுத்திச் சிதறடித்த மக்கள் மீள்க… வாழ்க…

Leave a Response