தீபாவளிக்குப் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

தில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லியில் மாசு அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தில்லி நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அளித்த உத்தரவில்,

இந்த ஆண்டு தீபாவளிக்குப் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு தீபாவளியாவது பட்டாசுகள் வெடிக்காமல் கொண்டாட முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளது.

டெல்லியின் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களை சமாளிக்க கடந்த ஜனவரி 1, 2016 முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Response