சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள்தயாரிப்பில் மலேசியாவின் முன்னணி நிறுவனமானஆரோக்யாவின் இந்திய அலுவலகத் திறப்பு விழா சென்னை அண்ணா சாலை விஜிபி மாலில் சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகுகடம்பூர் செ. ராஜூ மற்றும் விஜிபி குழும தலைவர்கலைமாமணி மதிப்புமிகு சந்தோசம் ஆகியோர்அலுவலகத் திறப்பு செய்து முதல் விற்பனையைத்துவக்கி வைத்தனர். ஆரோக்கியம் நிறுவனர் கணேஷ்வீரய்யா, ஆரோக்யம் ஸ்டீவியா (இனிப்பு துளசி சாறு)அறிமுகம் செய்தார்.
ஆரோக்கியம் நிறுவனர் கணேஷ், : ‘ஸ்டீவியா, தென்அமெரிக்க நாடான பராகுவே-யில் சுகாதாரமானமுறையில் விளையும் இயற்கை மூலிகை. ஏராளமானசத்துக்களை உள்ளடக்கிய ஸ்டீவியா இலைகளைச்சுத்திகரித்து நூறாண்டுகளுக்கு மேல் பானங்களில் இனிப்புச் சுவைக்காக கொலம்பிய மக்கள் பயன்படுத்திவருகின்றனர். ஸ்டீவியா சாற்றில் 0% கலோரி மற்றும் 0%கொழுப்பு உள்ளதால் ரத்த குளுக்கோஸ் அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. மாறாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்திறனை மேம்படுத்தவும், சருமப் பாதுகாப்பிற்கும், தலைமுடி உதிர்வதையும் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகளற்ற ஸ்டீவியா சாறு உடல் பருமனானவர்கள்,புற்று நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள்,குழந்தைகள், வயதானவர்களுக்கு ஏற்றது’ என்றுதெரிவித்தார்.
செய்தித்துறை அமைச்சர் ‘அண்மையில் மலேசியகோலாலம்பூர் எம்ஜஆர் நூற்றாண்டு மாநாட்டில்பங்கேற்கச் சென்றிருந்தபோது மலேசியாவில் சிறப்பாகத்தொழில் செய்துவரும் தமிழ் தொழிலதிபர்களை சந்தித்துஅவர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்புவிடுத்தேன். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவிஅம்மா அவர்கள் “Tamil Nadu is the global investors paradise” என்றுஉருவாக்கியுள்ள சூழலில் பலரும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தனர். அம்மா வழியில் நல்லாட்சியைத் தொடரும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று நல்ல தொடக்கத்தைக் கண்டிருக்கும் மலேசியவாழ் தமிழரான கணேஷ் வீரய்யாவின் ஆரோக்கியம்நிறுவனம் தமிழக மக்கள் பயன்பெறும் படிவளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.
விஜிபி குழும தலைவர் பேசுகையில்,
‘அன்றாடம்ஸ்டீவியா உட்கொண்டு வருபவர்கள் நாள் முழுக்கபுத்துணர்வோடு இருப்பதை உணர முடியும். ஸ்டிவியாதுளசி, பொடுகைத் தடுத்து முடி உதிர்வதைக்கட்டுப்படுத்துகிறது. கேன்சர் செல்களை எதிர்க்கவல்லது.நாம் அருந்தும் பானங்களிலோ உணவிலோ சர்க்கரைக்குப்பதில் ஸ்டிவியா பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப்பேண முடியும்’ என்றார்.
துளசியின் தூதுவர் ஜஸ்வந்த் சிங், ‘ஒவ்வொரு வீட்டிலும்அவசியம் இருக்க வேண்டியது ஸ்டீவியா துளசி மாடம்.தினமும் இரண்டு இலைகளைக் கிள்ளி சாப்பிட்டுவருபவர்களுக்கு எந்த நோயும் வராது. வீட்டுக்கு வீடுஸ்டிவியா செடி வளர்க்க ஆரோக்கியம் நிறுவனம்தமிழ்நாடு அரசுடன் இணைந்து முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.
ஆரோக்கியம் நிறுவனத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர்தாரணி, ‘மலேசியாவில் பிரசித்தி பெற்ற இனிப்பு துளசிச்சாறை இந்திய மக்கள், குறிப்பாக பெண்கள் அன்றாடவாழ்வில் பயன்படுத்தி மாதாந்திர பிரச்சனைகளை சீர்படுத்தவும் பல்வேறு நோய்களிலிருந்து தங்களைதற்காத்துக் கொள்ளவும் முடியும். மேலும் தமிழ்நாட்டின்அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
மலேசிய நாட்டிலிருந்து சதீஷ், ஆனந்த், அழகம்மா,சிவப்பிரகாசம், மொரீசியஸ் ராஜா, தமிழ்நாட்டிலிருந்துமுனைவர் சிவக்குமார், பேராசிரியர் பொன்கி பெருமாள்,குறள் மலை சங்க ரவிக்குமார், தொழிலதிபர் ரமேஷ்,இளவிஜய், கட்டிடவியலர் சோமசுந்தரம், இயக்குனர் ஏஆர்ராஜநாயகம், புதுக்கோட்டை சாந்தகுமார், ஸ்தபதி பூபதி,ஈரோடு அருள், பாலாஜி, பிரகாஷ் உள்ளிட்ட பலர்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மீடியாபாஸ்கர், பிஆர்ஓ செல்வரகு மற்றும் லேடர் செழியன்செய்திருந்தனர்.