பிக்பாஸ் குழுவினர் பங்குபெற்ற தமிழ்அழகிப்போட்டி

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு,தமிழ்ப் பாரம்பரியத்தை அனைவரும் அறியும் வகையில், உலகெங்கும் உள்ள தமிழ்ப் பெண்களுக்கான உலகத் தமிழ் அழகிப் போட்டியை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தவுள்ளது.

அந்நிகழ்வில் பங்கு பெற, மிஸ் தமிழ் சென்னை நிகழ்வு சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.

தமிழகத்திலுள்ள பெண்கள் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அதில், மிஸ் தமிழ் சென்னையாக காருண்யா என்ற மருத்துவ மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிஸ் தமிழ் சென்னை இரண்டாவதாக சுவேதா,
சிறந்த நடையழகியாக அருணா,
சிறந்த சிரிப்பழகியாக ரோஜா,
சிறந்த அறிவழகியாக அமிர்த லஷ்மி,
சிறந்த நம்பிக்கை அழகியாக ஜெயவர்தினி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போட்டியின் நடுவர்களாக நடிகர் வின்சென்ட் அசோகன், மார்க் மேன்யூல், மணிமாறன், ஜான் பிரிட்டோ, கிருத்திகா ராதாகிருஷ்ணன், ரமேஷ் பாலா, ஸ்ம்ரிதி வெங்கட், ஜெனனீதா ஆகியோர் இருந்தனர்.

இப்போட்டியின் போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சினேகன்,ஆர்த்தி, ஜூலி,கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை எடிசன் விருது நிறுவனம் ஏற்பாடு செய்தது.

Leave a Response