பிக்பாஸ் வீட்டுக்கு நடிகை அஞ்சலி வருவது இதற்காகத்தான்

விஜய் தொலைக்காட்சியில், கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் போட்டியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஓவியா வெளியேறிய பின்பு பிக்பாஸ் படுத்துவிட்டார். மீண்டும் அவருக்கு உயிரூட்ட, விஜய் டிவி செய்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அதன்பின் கமல் பொறுப்பேற்று அரசியல் பேசி பிக்பாஸை சூடுபிடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி பங்கேற்றுள்ளார். ஆனால், அவர் போட்டியாளராகப் பங்கேற்கவில்லை. சிறப்பு விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அஞ்சலி வரப்போகிறார்.

பிக்பாஸின் விளம்பரத்துக்காக அவர் வரவில்லை,அஞ்சலி, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தின் விளம்பரத்திற்காக அஞ்சலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் பலூன் படத்தின் இயக்குநரும் பங்கேற்றுள்ளார். ஆனால் நாயகன் ஜெய் வருவது போல் தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் கணிசமாகக் குறைந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இப்போது ஒரு சின்னபடத்துக்கு விளம்பரம் செய்து அந்தக் குற்றச்சாட்டை சமன் செய்கிறது பிக்பாஸ்.

Leave a Response