ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாரா செல்வராகவன்..?


கடந்த சில வருடங்களுக்கு முன் இது செல்வராகவன் படம் தானா என்கிற வகையில், வழக்கமான அவரது பாணி படங்களில் இருந்து வித்தியாசமாக வெளியான படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.. மனச்சிக்கல்களை படமாக்கி வந்த செல்வராகவன் இந்தப்படத்தில் பேண்டசி கதைக்களத்தில் குதித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்..

கார்த்தி ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென் ஆகியோர் நடித்த இந்தப்படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறினாலும் இப்போதும் டிவி நேயர்களின் மிக விருப்பமான படமாக இருப்பது ஆச்சர்யம்..

இந்தநிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதிலளித்த செல்வராகவன், பேச்சுவாக்கில் ‘சோழர் பயணம்’ தொடரும் என குறிப்பிட்டிருந்தார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் சோழர் பற்றிய ஒரு பிளாஸ்பேக் காட்சி இடம்பெற்றிருந்தது.. அனைவராலும் பாராட்டவும் பட்டது.

தற்போது செல்வராகவன் கொடுத்துள்ள ‘க்ளூ’வை வைத்து பார்த்தால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் செல்வராகவன் இறங்குவார் என்றே தெரிகிறது.

Leave a Response