
ஆர்.பார்த்திபனின் ‘புதிய பாதை’ உங்களுக்குப் பிடிக்கும் என்றால் ராமின் ‘தரமணி’யை ரசிப்பீர்கள். இரண்டும் ஒரே கதையாடல்தான். என்ன முந்தையதில் இருக்கும் நேர்மையான குப்பை பிந்தையதில் சந்தர்ப்பவாத குப்பையாக பரிணாமம் அடைந்திருக்கிறது.
1980 – 90களின் செக்ஸ் பத்திரிகைகளில் வெளியான ‘அனுபவக்’ கதைகள் அனைத்திலும் வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் கணவனின் மனைவிமாரை கல்லூரி இளைஞன் பஜனை செய்வது உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும்.
அந்த நெரேஷனை ‘தரமணி’ இரண்டாம் பாதியில் வேறு மாதிரியாக ராம் பிரதி எடுத்திருக்கிறார்.
தமிழ்ப் பட ரசிகன் எப்போதுமே வஞ்சிக்கப்பட்டவன். அதனாலேயே கே.பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்களை உன்னதமாக கொண்டாடினான். பிறகு அகத்தியனின் வுமன் கேரக்டர்ஸை வியந்தான். இந்தப் பட்டியலில் வெற்றிகரமாக ‘தரமணி’ ஆண்ட்ரியாவை இணைத்திருக்கிறார் ராம்.
அரசியல் தெரியாத, பெண்களின் உணர்வுகளை உணர்ந்துக் கொள்ள முயற்சிக்காத ஒரு போலி அறிவுஜீவி எடுத்திருக்கும் போலியான படமே ‘தரமணி’.
இதற்கு ‘சகலகலா வல்லவன்’ பாணி படங்களே பரவாயில்லை.
அப்பர் மிடில் க்ளாஸ் வாழ்க்கை, லோக்கல் வாழ்க்கை மட்டுமல்ல சினிமா க்ராஃப்டும் ராமுக்கு தெரியவில்லை.
‘தரமணி’ தரமில்லாத மணி. பெண்களை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியாது. – கே.என்.சிவராமன்
