எம்எல்ஏ, எம். பி சம்பள உயர்வுக்கு எதிராகப் பேசிய எம். பி


மக்களவையின் பூஜ்ய நேரத்தில் பா.ஜ எம்.பி வருண் காந்தி பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சம்பளத்தை 400 மடங்கு உயர்த்தியுள்ளனர். சம்பளத்தை உயர்த்திக் கொள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் உள்ளதால், இதுபோல் நடக்கிறது. வறுமை காரணமாக கடந்த ஒராண்டில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் எம்.பி, எம்.எல்.ஏக்களின் சம்பளம் மட்டும் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. நமது கவனம் எங்கேயுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் சிறுநீர் குடித்தும், எலும்பு கூடுகளுடனும் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் தமிழக சட்டசபை எம்.எல்ஏ.க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உணர்வில்லாததை காட்டுகிறது. இங்கிலாந்தில் கடந்த 10 ஆண்டில் எம்.பி.க்களின் சம்பளம் 13 சதவீதம்தான் உயர்ந்துள்ளது. ஆனால் இங்கு 400 சதவீதம் உயர்ந்துள்ளது. எம்.பிக்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்ய இங்கிலாந்தில் தனிக் குழு உள்ளது. அதுபோன்ற முறை இந்தியாவில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

Leave a Response